தில்லி ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் PTI
இந்தியா

தில்லி கூட்ட நெரிசல்: உயர்நிலைக் குழு விசாரணை!

தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் குறித்து உயர்நிலைக் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

DIN

தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் குறித்து உயர்நிலைக் குழு விசாரணை நடத்த ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.

முதல்கட்டமாக சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி அதிலிருந்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான முக்கிய காரணம் என்ன என்பதை ஆராய்வதே இக்குழுவின் நோக்கம் என்றும் அதற்காக ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளதாக விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர். இதுவரைக்கும் 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர்.

இதனிடையே மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ரயில்களில் பயணிக்க தில்லி ரயில் நிலையத்தில் மக்கள் காத்துக்கொண்டிருக்கும்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியது, சில விரைவு ரயில்கள் வர தாமதமானது, அதிக விலைக்கு சிலர் டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தது உள்ளிட்டவை தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்காக காரணமாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் கூட்ட நெரிசல் ஏற்பட முக்கிய காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்பு உயர்நிலைக் குழு அமைத்து ரயில்வே துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதன் ஒருபகுதியாக ரயில் நிலையத்தில் இருந்த பல்வேறு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு அக்குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... கோடிகளால் கட்டமைக்கப்படும் பிம்பங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் போட்டிகளில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு!

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

விநாயகர் சதுர்த்தி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

ஷாவ்மி பேட்டரிகளுக்கு 50% தள்ளுபடி! 4 நாள்கள் மட்டுமே...

SCROLL FOR NEXT