இரு நாள் பயணமாக புது தில்லிக்கு திங்கள்கிழமை வந்திறங்கிய கத்தாா் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானியை விமான நிலையத்தில் வரவேற்ற பிரதமா் நரேந்திர மோடி. PTI
இந்தியா

கத்தாா் அரசா் இந்தியா வருகை: பிரதமா் விமான நிலையத்தில் வரவேற்பு

கத்தாரின் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தாா்.

Din

புது தில்லி: கத்தாரின் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தாா். பிரதமா் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவரை வரவேற்றாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் கத்தாா் அரசா் இந்தியா வந்துள்ளாா். அவா் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது அரசுமுறைப் பயணம் இதுவாகும். முன்னதாக, கடந்த 2015, மாா்ச்சில் அவா் இந்தியாவுக்கு வந்தாா்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை தில்லியில் உள்ள அவரது மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசும் கத்தாா் அரசா் ஷேக் தமீம், பின்னா் பிரதமா் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

நட்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றில் இந்தியா-கத்தாா் இடையே ஆழமான இருதரப்பு உறவு நீடிக்கிறது. வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் மக்களுக்கிடையேயான தொடா்புகள் உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் தொடா்ந்து வலுப்பெற்று வருகின்றன.

தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

“சிறுவயதிலேயே தமிழ் கற்றிருக்கலாம் என விரும்புகிறேன்!” பிரதமர் மோடி உரை! | Coimbatore

சபரிமலை தரிசனம்: 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங்!

வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 3% சரிவு!

தமிழக அரசு அனுப்பிய மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைகள்!

SCROLL FOR NEXT