அதிஷி  PTI
இந்தியா

தில்லியை ஆட்சி செய்ய பாஜகவில் ஆளில்லை: அதிஷி

தில்லியை ஆட்சி செய்ய பாஜகவில் ஆளில்லை என்று அதிஷி விமர்சித்திருப்பது பற்றி...

DIN

தில்லியை ஆட்சி செய்ய பாஜகவில் ஆளில்லை என்பது தெளிவாகியிருப்பதாக முன்னாள் முதல்வர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜகவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 48 பேரில் ஒருவரைகூட பிரதமர் மோடி நம்பவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாள்களாகும் நிலையில், முதல்வர் மற்றும் அமைச்சரவை குறித்த அறிவிப்பை பாஜக வெளியிடாமல் உள்ளது.

இதனை விமர்சித்து அதிஷி பேசியதாவது:

”தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்திட்ட 10 நாள்கள் ஆகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பெயர்களை பிப். 9ஆம் தேதியே பாஜக அறிவித்து, வளர்ச்சிக்கான பணிகளை தொடங்கும் என்றும் மக்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், பாஜகவில் தில்லியை ஆட்சி செய்வதற்கான ஆட்கள் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது. 48 பேரில் ஒருவரையும் பிரதமர் மோடிக்கு நம்பவில்லை. பாஜகவிடம் தொலைநோக்கு பார்வையோ திட்டமிடலோ இல்லை.

அவர்கள் அனைவரும் தில்லி மக்களை கொள்ளையடிப்பார்கள் என்று பாஜகவுக்கு தெரியும். அரசை நடத்த திறன் கொண்டவர்கள் யாரும் இல்லையென்றால், மக்களுக்கான பணிகளை எப்படி செய்வார்கள்?” என விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலமைப்பு தின உறுதியேற்பு

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் உள்பட 7 போ் கைது

நாகை: 23 மாணவா்களுக்கு ரூ.2.58 கோடி கல்விக்கடன்

குருகிராம்: போக்குவரத்து காவல் அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சி! இரு போலி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது!

3 ஊழல் வழக்குகள்: ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு!

SCROLL FOR NEXT