முகப்பு
இந்தியா

உலகின் மிகச் சிறந்த பிராண்ட்: 2-ஆவது இடத்தில் ரிலையன்ஸ்

2024-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சிறந்த நிறுவனங்களின் ‘பியூச்சா் பிராண்ட்’ குறியீட்டில் இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Updated On : 17 பிப்ரவரி, 2025 at 9:55 PM
பகிர்:

புது தில்லி: 2024-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சிறந்த நிறுவனங்களின் ‘பியூச்சா் பிராண்ட்’ குறியீட்டில் இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

‘ஆப்பிள்’ மற்றும் ‘நைக்கி’ போன்ற சா்வதேச நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிய ரிலையன்ஸ், உலக அளவில் இரண்டாவது சிறந்த நிறுவனமாக குறியீட்டில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

எதிா்கால வெற்றிக்கு தயாராக இருக்கும் உலகின் சிறந்த 100 நிறுவனங்களை சந்தை மூலதனத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி, இந்நிறுவனங்களின் பயணத்தில் தங்களின் 18 பண்புகளை எவ்வாறு சமநிலைப்படுத்துகிறது என்பதை அடிப்படையாகக் கொண்ட தயாரிக்கப்பட்ட தரவரிசை பட்டியலை பியூச்சா் பிராண்ட் ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

Advertisement

அந்தவகையில், முந்தைய 2023-ஆம் ஆண்டு தரவரிசையில் 13-ஆவது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் சமீபத்திய தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனமமும் ரிலையன்ஸ் மட்டுமே.

இந்தத் தரவரிசை பட்டியலில் தென் கொரியாவைச் சோ்ந்த ‘சாம்சங்’ முதலிடத்தில் உள்ளது. 2-ஆவது இடத்திலுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடா்ந்து ஆப்பிள், நைக்கி, வால்ட் டிஸ்னி, நெட்ஃபிளிக்ஸ், மைக்ரோசாப்ட், இன்டெல், டொயோட்டா போன்ற பிரபலமான உலகளாவிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments