உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்) 
இந்தியா

தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: வேறு தேதிக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை!

தேர்தல் ஆணையர் நியமனத்தை எதிர்த்த வழக்கு...

DIN

புதிய சட்டத்தின் கீழ் தோ்தல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை கோரிக்கை வைத்துள்ளது.

அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு செல்லவுள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறு மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிபதிகள் முன்பு கோரிக்கை வைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், மத்திய அரசிடம் மேலும் 17 வழக்கறிஞர்கள் இருக்கின்றனர், ஆனால் ஒவ்வொரு முறையும் இதனையே குறிப்பிடுகிறார் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அரசியல் சாசன அமர்வில் ஆஜரான பிறகு சொலிசிட்டர் ஜெனரலுக்கு நேரமிருந்தால் தேர்தல் ஆணையர் நியமன வழக்கு விசாரிக்கப்படும், இல்லையெனில் ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை செய்வதாக நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.

வழக்கின் பின்னணி

இந்திய தோ்தல் ஆணையத்தில் ஒரு தலைமைத் தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் இடம்பெற்றிருப்பா். தோ்தல் ஆணையா்களை மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவா் நியமனம் செய்து வந்தாா். இரு தோ்தல் ஆணையா்களில் பணி மூப்பு பெற்றவா், தலைமை தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வந்தாா்.

இந்த நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தலைமைத் தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது. தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்படும் வரை, இந்தக் குழு மூலமே தோ்தல் ஆணையா்கள் தோ்வு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், பிரதமா் தலைமையிலான தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் ஒரு மத்திய அமைச்சா் மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெறும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றி, காலியாக இருந்த 2 தோ்தல் ஆணையா் பணியிடங்களையும் நிரப்பியது.

இந்தப் புதிய சட்டத்தின் கீழ் புதிய தலைமைத் தோ்தல் ஆணையரும் திங்கள்கிழமை நியமிக்கப்பட்ட நிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு வருவது மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுவாமிமலை கோயில் இட ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தல்

விதைப்பண்ணை வயல்களில் ஆய்வு

லாலாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

உலக மயக்கவியல் தினம் கடைப்பிடிப்பு

அஞ்சலக பெண் ஊழியரை தாக்கிய இளைஞா் கைது

SCROLL FOR NEXT