குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!
குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு பற்றி..
தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.
தில்லியின் 9வது முதல்வராக ரேகா குப்தா மற்றும் அவரது அமைச்சரவையில் 6 பேர் வியாழக்கிழமை பதியேற்றுக் கொண்டனர்.
தில்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக. ,இதையடுத்து பதவியேற்பு விழா தில்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்றது.
முதல்வர் ரேகா குப்தாவுக்கு துணைநிலை ஆடுளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகம் வெளியிட்ட தகவலில்,
தில்லி முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று சந்தித்துப் பேசினார்.
ரேகா குப்தாவையடுத்து, கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளையும் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு மேற்கொண்டார் என்று தெரிவித்துள்ளது.