பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது.
பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தின் சித்ரதுர்காவில் வெள்ளிக்கிழமை இரவு கன்னட ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்கள் ஓட்டுநரையும் தாக்கியதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திற்கு செல்லும் மகாரஷ்டிர அரசுப் பேருந்து சேவையை நிறுத்தி வைக்க அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வரை பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்படாது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
முன்னதாக பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேச தெரியாது எனக்கூறிய கர்நாடக பேருந்து நடத்துநர் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.