தில்லி முதல்வர் அலுவலகம் முன்பு அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்
பெண்களுக்கு ரூ.2,500 என்ற வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அலுவலகம் முன்பு எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெண்களுக்கு ரூ.2,500 என்ற வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அலுவலகம் முன்பு எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய அதிஷி, இரண்டு நாள்களுக்கு முன்பு நாங்கள் டெல்லி முதல்வரிடம் நேரம் கேட்டோம். ஆனால் எங்களுக்கு நேரம் வழங்கப்படவில்லை.
எனவே நாங்கள் இங்கே சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வெளியே இருக்கிறோம்.
முதல் அமைச்சரவைக்குப் பிறகு பெண்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என்று பிரதமர் மோடியின் வாக்குறுதி தொடர்பாக நாங்கள் அவரைச் சந்திக்க விரும்புகிறோம்.
மோடியின் உத்தரவாதம் தவறானது. இவ்வாறு அவர் குறிபிட்டார்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகல்!
முதல்வர் தங்களுக்கு எந்த உறுதியும் வழங்கவில்லை என்றும், ஆனால் மார்ச் 8 ஆம் தேதிக்குள் வாக்குறுதியை நிறைவேற்ற தன்னால் முடிந்தவரை முயற்சிப்பதாகவும் தெரிவித்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்தது.
அதன்படி அண்மையில் நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைத்தது. இதையடுத்து தில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்.