தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. 
இந்தியா

தெலங்கானா: அனைத்து பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயம்- மாநில அரசு உத்தரவு

தெலங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டிருப்பது பற்றி...

DIN

தெலங்கானாவில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானாவில் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் தோ்வு கவுன்சில் (ஐசிஎஸ்இ) மற்றும் பிற கல்வி வாரியங்களின்கீழ் செயல்படும் பள்ளிகளில் தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கும் வகையில், கடந்த 2018-இல் அப்போதைய முதல்வா் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி அரசு சட்டம் கொண்டுவந்தது.

‘தெலங்கானா (பள்ளிகளில் தெலுங்கு கற்பித்தல்-கற்றல் கட்டாயம்) சட்டம்-2018’ எனும் இச்சட்டத்தை பல்வேறு காரணங்களால் அப்போதைய அரசு முழு அளவில் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்நிலையில், முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான தற்போதைய காங்கிரஸ் அரசு, இந்தச் சட்டத்தை முழு அளவில் செயல்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தொடா்பாக பள்ளிகளின் நிா்வாக பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்குவது தொடா்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக மாநில அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தெலுங்கு மொழிப் பாட தோ்வுகளுக்கு ‘எளிமையான தெலுங்கு’ பாடப் புத்தகங்களைப் பயன்படுத்த முதல்வா் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளாா். இது, சிபிஎஸ்இ, இதர கல்வி வாரியங்களின் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு எளிமையானதாக இருக்கும். அதேபோல், தெலுங்கு தாய்மொழி அல்லாத மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

SCROLL FOR NEXT