இந்தியா

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைக் கண்டுபிடிப்பவருக்கு ரூ. 1 லட்சம்!

பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக...

DIN

பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, குற்றவாளியின் புகைப்படம் வெளியான நிலையில், அந்நபர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ. 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று புணே காவல் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் உள்ள பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா்.

இதையடுத்து, பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறி பேருந்துநிலையத்தை பொதுமக்கள் சூறையாடினர்.

இச்செயலில் ஈடுபட்ட நபா் தலைமறைவாக உள்ளதாகவும், ஏற்கெனவே குற்றப்பின்னணி கொண்ட அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 10,000 போனஸ்: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

பேருந்துக்குள் தனக்கு பாலியல் வன்கொடுமை நோ்ந்ததாக அப்பெண் காவல்துறையில் புகாரளித்தார்.

இதையடுத்து, சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை காவல்துறையினா் அடையாளம் கண்டனர். தத்தாராயா ராமதாஸ் கட்டே எனும் அந்த நபர் மீது ஏற்கெனவே திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவாகியுள்ளன. தலைமறைவாகிய அவரைப் பிடிக்க பல்வேறு 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குற்றவாளியைப் பிடிப்பவருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

SCROLL FOR NEXT