உள்துறை அமைச்சகத்தின் வடக்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் தில்லி முதல்வர் ரேகா குப்தா வருகை தந்துள்ளார்.
தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மறு ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை முக்கியமான கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்த கூட்டம் உள்துறை அமைச்சகத்தின் வடக்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெறுகின்றது.
தில்லியில் சமீபத்திய முன்னேற்றங்கள், பாதுகாப்பு சவால்கள் மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சகம், தில்லி காவல்துறை மற்றும் பிற சட்ட அமலாக்க நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக அமைக்கப்பட்ட தில்லி அரசுக்கும் தில்லி காவல்துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான உத்திகள் குறித்தும், நகரத்தில் சட்டம் ஒழுங்குக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதிலும் இந்த கூட்டம் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் பாதுகாப்பு நிலைமைகளை அமித் ஷா தீவிரமாகக் கண்காணித்து வருகிறார். மேலும் தேசிய தலைநகரான தில்லியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அங்கு வலுவான சட்டத்தைக் கொண்டுவருவதற்கான அவசியத்தை முன்னர் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தில்லியின் நான்காவது பெண் முதல்வராக பிப்ரவரி 20 அன்று ரேகா குப்தா பதவியேற்றார். இந்த கூட்டத்தில் தில்லி உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், தில்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா மற்றும் பிற மூத்த தில்லி காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.