தத்தாத்ரேய ராமதாஸ் கடே  
இந்தியா

புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!

புணே பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டது பற்றி...

DIN

புணேவில் பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தத்தாத்ரே ராம்தாஸ் கடே, ஷிரூர் தாலுகாவில் உள்ள கிராமத்தில் தலைமறைவாக இருந்த நிலையில், புணே குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரை அங்குள்ள காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்தில் வல்லுறவு

புணேயின் ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பேருந்துக்காக காத்திருந்த 26 வயதுப் பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்ற ஒரு நபா், தனி இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துக்குள் வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பினாா்.

மாநிலத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில் ஈடுபட்டவா் தத்தாத்ரேய ராமதாஸ் கடே (37) என காவல் துறையினா் அடையாளம் கண்டனா். அவா் மீது ஏற்கெனவே திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவாகியுள்ளன. தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

புணேயில் குனாட் கிராமத்தில் உள்ள கரும்புக் காடுகளில் அவா் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் தேடும் பணியை மேற்கொண்டனர்.

இதனிடையே, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை கிடைக்க மாநில அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே உறுதிபட தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT