இந்தியா

டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி!

கடந்த டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி என மத்திய அரசு தகவல்.

DIN

கடந்த டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

டிசம்பர் மாதம் ஈட்டப்பட்டுள்ள 1,76,857 லட்சம் கோடி ரூபாயில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 32,836 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.40,499 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.47,783 கோடி, செஸ் வரி ரூ.11,471 கோடியாகும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை(1.65 லட்சம் கோடி ரூபாய்) ஒப்பிடுகையில் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

டிசம்பரில், உள்நாட்டு பரிவா்த்தனைகள் மீதான ஜிஎஸ்டி 8.4 சதவீதம் அதிகரித்து ரூ.1.32 லட்சம் கோடியாகவும், இறக்குமதிகள் மீதான ஜிஎஸ்டி 4 சதவீதம் அதிகரித்து ரூ. 44,268 கோடியாகவும் உள்ளது. இந்த மாதத்தில் திருப்பியளிக்கப்பட்ட தொகை ரூ.22,490 கோடியாகும்.

இதுவே கடந்த நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.82 லட்சமாக (8.5% உயர்வு) இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக 2024 ஏப்ரலில் ரூ. 2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT