புத்தாண்டு 
இந்தியா

நள்ளிரவு 0.00! மும்பை ரயில்கள் ஹார்ன் அடித்து புத்தாண்டுக் கொண்டாட்டம்!

மும்பை ரயில் நிலையத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

DIN

மும்பையில் சிறப்பு மிக்க சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு ரயில்களில் ஹார்ன் அடித்து புத்தாண்டுக் கொண்டாட்டத்தை களைகட்டியது.

பல ஆண்டுகாலமாக, இந்த வழக்கம் நடைமுறையில் இருப்பதாகவும், கடலில் கப்பல்களும் நள்ளிரவு 12 மணிக்கு இதுபோன்ற ஒலிகளை எழுப்பும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணி மற்றும் படிப்பு என பல்வேறு காரணங்களால் வெளியில் தங்கியிருப்பவர்கள், புத்தாண்டை வீட்டில் கொண்டாடவும், வேலை முடிந்து வீடு திரும்புவோரும் நேற்று நள்ளிரவு மும்பை ரயில் நிலையத்தில் காத்திருந்தால், அவர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவம் கிடைத்திருக்கும்.

சரியாக மும்பை ரயில் நிலையத்தில் இருந்த கடிகாரங்கள் 0.00 என்று ஆகும்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரயில்களின் ஹாரன்கள் இசை போல ஒலி எழுப்பி, புத்தாண்டு வாழ்த்து சொன்னது போல இசைக்கப்பட்டது.

அப்போது அங்கு நின்றிருந்தவர்கள் பலரும் உற்சாகமடைந்தனர். சிலருக்கு இது காலம் காலமாக நடப்பது தெரிந்திருக்கலாம். புதியவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT