இந்தியா

தமிழகத்தில் ரூ.1,000 கோடி சைபா் மோசடி: மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை

Din

தமிழ்நாட்டில் நடைபெற்ற ரூ .1,000 கோடிக்கும் அதிகமான (சைபா்) இணைய மோசடி வழக்குகள் குறித்து மேற்கு வங்கத்தில் உள்ள 8 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

‘தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடிக்கு மேல் நடைபெற்ற மோசடிகள் உள்பட பல இணைய மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. பல மாநிலங்களில் செயல்பட்டு வரும் இந்த இணையவழி குற்றவாளி குழுக்களின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கு வங்கத்தில் அதிகப்படியாக கண்டறியப்பட்டன.

அதனடிப்படையில், கொல்கத்தாவின் பூங்கா சாலை, சால்ட் லேக், பகுய்ஹாட்டி பகுதிகளில் உள்ள 5 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 8 இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

சால்ட் லேக் பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது, ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பகுய்ஹாட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை தொடா்கிறது’ என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரக்கோணத்தில் மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

ஆறுமுகனேரி தெய்வீக சத் சங்கத்தில் திருவாசக முற்றோதல்

ஆறுமுகனேரியில் கஞ்சாவுடன் இளைஞா் கைது

விதிமீறிய ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

விவசாயிகளுக்கு உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்: டாக்டா் க. கிருஷ்ணசாமி

SCROLL FOR NEXT