ராகுல் காந்தி கோப்புப் படம்
இந்தியா

ஏகலைவனைப்போல இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜக அழிக்கிறது: ராகுல்

அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகளால் இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜக சீரழிப்பதாக ராகுல் குற்றச்சாட்டு

DIN

அரசுப் பணியாளர் தேர்வு மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜக சீரழிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பிகாரில் டிசம்பர் மாதம் நடைபெற்ற அரசுத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக தேர்வர்கள் தேர்வைப் புறக்கணித்து, போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மீது குற்றம் சாட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது ``ஏகலைவனைப்போல இந்திய இளைஞர்களின் கட்டைவிரலை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை பாஜக அழித்து வருகிறது. அரசுப் பணியாளர் ஆள்சேர்ப்பில் தோல்வி ஏற்பட்டிருப்பது மறுக்கமுடியாத அநீதி.

முதலாவதாக, ஆள்சேர்ப்பு அறிவிக்கப்படவில்லை. ஆள்சேர்ப்பு அறிவிக்கப்பட்டாலும், தேர்வுகள் சரியான நேரத்தில் நடத்தப்படுவதில்லை; தேர்வுகள் நடைபெற்றாலும், வினாத்தாள்கள் கசிந்துவிடும்.

இதுகுறித்து இளைஞர்கள் நீதி கேட்கும்போது, அவர்களின் குரல் இரக்கமின்றி நசுக்கப்படுகிறது. இந்த முறைகேடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த இரண்டு மாணவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களின் உரிமைகளுக்கான குரலை ஒடுக்கும் பாஜகவை அனுமதிக்க மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

பிகாரில் 900க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் முதல் நிலைத் தேர்வு டிச. 13ஆம் தேதி நடைபெற்றது. ஏறக்குறைய ஐந்து லட்சம் விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுதினர்.

இதில் வினாத்தாள்களை குறிப்பிட்ட மையங்களிம் மட்டும் தாமதமாகக் கொடுத்தது உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தி வந்தனர். மாநில அரசைக் கண்டித்தும் தேர்வாணையத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், டிச. 30ஆம் தேதி ஆணையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. பிகார் அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து பாட்டாவில் உள்ள காந்தி திடலில் தேர்வர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT