TNIE
இந்தியா

கணவரைக் கொன்று உடலை 2 துண்டுகளாக வெட்டிய மனைவி!

கர்நாடகத்தில் குடிபோதையில் இருந்த கணவரைக் கொன்றது பற்றி..

DIN

கர்நாடகத்தில் குடிபோதையில் இருந்த கணவரைக் கொன்று உடலை 2 துண்டுகளாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

கர்நாடக மாநிலம் பெலகவியின் சிகோடி தாலுக்காவில் உமாராணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமந்தா இட்னாலி(40). அவரது மனைவி சாவித்ரி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர், பணம் கேட்டு அடிக்கடி மனைவியைத் துன்புறுத்திவந்தார். கொலை நடந்த அன்று மனைவிக்கு சொந்தமான நிலத்தை விற்று தனக்கு இருசக்கர வாகனம் வாங்கி தர வற்புறுத்தியுள்ளார்.

கடந்த டிசம்பர் 8-ம் தேதி இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சாவித்திரி மதுபோதையிலிருந்த கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் கல்லைக் கொண்டு முகத்தைச் சிதைத்துள்ளார். பின்னர் உடலை இரண்டு துண்டுகளாக வெடியுள்ளார். வெட்டிய உடலைத் தனது வீட்டிலிருந்து வெகுதூரம் இழுத்துச்சென்று புதாரில் வீசியுள்ளார்.

அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவதையடுத்து டிசம்பர் 10-ம் தேதி உடல் கண்டெடுத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இறந்தவர் ஸ்ரீமந்தா என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரின் மனைவி மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத மனைவி, விசாரித்ததில் கொலை செய்தது ஒப்புக்கொண்டார்.

நிலத்தை விற்று இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்று தன்னை வற்புறுத்தினார். இதைத் தாங்கமுடியாமல் அன்றிரவு வீட்டின் வெளியில் தூங்கிக் கொண்டிருந்த கணவரைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா், மணிப்பூா் சம்பவங்களை ஒன்றுபடுத்தக் கூடாது: கே.எஸ்.அழகிரி

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

மார்க் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களை பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தல்

தருமபுரியில் ஒரே நாளில் 3 கோயில்களில் திருட்டு

SCROLL FOR NEXT