இந்தியா

பள்ளி முடிந்து வீடு சென்ற சிறுமி மீது கட்டை விழுந்து பலி!

கட்டுமானப் பணியில் இருந்த கட்டடத்தில் இருந்து கட்டை மாணவி மீது விழுந்ததால் பலி

DIN

பெங்களூருவில் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிறுமி மீது கட்டுமானப் பொருள்கள் விழுந்ததில் பரிதாபமாக பலியானார்.

பெங்களூருவில் வி.வி.புரத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் தேஜஸ்வினி என்ற மாணவி, சனிக்கிழமை (ஜன. 4) பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், அப்பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த ஓர் ஆறுமாடிக் கட்டடத்தின் ஆறாவது தளத்தில் இருந்த மரக்கட்டை ஒன்று, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தேஜஸ்வினி மேலே விழுந்தது.

இதனையடுத்து, அவரை அப்பகுதியிலிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், தேஜஸ்வினி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கட்டுமானப் பணியில் அலட்சியமாக இருந்தது, கட்டுமான இடத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களை மேற்கோள்காட்டி, கட்டுமானப் பணியாளர்கள் மீது தேஜஸ்வினியின் தந்தை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ததையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

நவ.29-இல் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT