கோப்புப்படம் Express
இந்தியா

ஒரே நாடு ஒரே தோ்தல்: நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது!

ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவை விவாதிக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் பற்றி...

DIN

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களை பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் தொடங்கியுள்ளது.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 2 மசோதாக்களை அண்மையில் நடைபெற்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

இந்த மசோதாக்களுக்கு எதிா்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால், அவற்றை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து பாஜக மக்களவை உறுப்பினா் பி.பி. செளதரி தலைமையில் 39 போ் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் 27 மக்களவை எம்.பி.க்கள், 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவின் முதல் கூட்டம் தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை கூடியுள்ளது. கூட்டுக்குழுவின் தலைவர் பி.பி. செளதரி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மசோதாக்களில் இடம்பெற்றுள்ள விவரம் குறித்து மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சக அதிகாரிகள் குழுவிடம் விளக்கமளித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT