அரவிந்த் கேஜரிவால் Center-Center-Delhi
இந்தியா

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் பாஜக: கேஜரிவால் குற்றச்சாட்டு!

தில்லி தேர்தலில் பாஜக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக கேஜரிவால் குற்றச்சாட்டு

DIN

தில்லி தேர்தலுக்கு முன்னதாக பாஜக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்

பாஜக வெளிப்படையாக வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பொருள்களை விநியோகம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக நேற்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்.

இந்த புகார் குறித்துத் தேர்தல் ஆணையம் ஏதாவது நடவடிக்கை எடுக்குமா? அல்லது பாஜகவின் முன் தேர்தல் ஆணையமும் கையாலாகாத நிலையில் உள்ளதா? என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் பூர்வாஞ்சல் மக்களுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாக, அசோகா சாலையிலிருந்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் இல்லம் வரை பாஜகவினர் பூர்வாஞ்சல் சம்மன் அணிவகுப்பு நடத்தினர்.

ஃபெரோஸ் ஷா சாலையில் உள்ள கேஜரிவால் இல்லம் அருகே போடப்பட்டிருந்த தடுப்புகளைக் கடக்க முயன்ற போராட்டக்காரர்களைக் கலைக்க தில்லி போலீஸார் தண்ணீர் பீய்ச்சியடித்து அவர்களைக் கைது செய்தனர்.

தலைநகர் தில்லியில் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 8-ல் வாக்குகள் எண்ணப்படுகிறது. நிகழவுள்ள பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றனர். இதன்மூலம் தில்லியில் மும்முனை போட்டி நிலவி வருகின்றது. தேர்தலில் வெற்றிகனியை யார் சுவைக்கப்போகிறார்கள் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் 2 ஆவது முறை...! மொராக்கோவில் கட்டடங்கள் இடிந்து விழுந்து 19 பேர் பலி!

நானே... ஃபாத்திமா சனா ஷேக்!

ஹார்ட் பீட் தொடர் நடிகருக்கு நடைபெற்ற திருமணம்!

பிக் பாஸ் 9: காதலிப்பதற்காக பிக் பாஸ் வந்தார் விஜே பார்வதி!

என்றும்... சகத் கன்னா!

SCROLL FOR NEXT