முகப்பு
இந்தியா

பௌர்ணமியில் கருத்தரிக்கக் கூடாது: பள்ளி மாணவிகளுக்கு பாடம் எடுத்த டிஐஜி

புத்திசாலி குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் என பள்ளி மாணவிகளுக்கு பாடம் எடுத்த டிஐஜி

Updated On : 11 ஜனவரி, 2025 at 6:13 AM
கோப்புப் படம்
பகிர்:

பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் சுயமரியாதையை காப்பாற்றுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை பெண் டிஜிஐ, புத்திசாலி குழந்தைகளைப் பெறுவது எப்படி? என்று சொல்லிக்கொடுத்த விடியோ வைரலாகியிருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் ஷஹ்தோல் காவல்துறை டிஐஜி, அக்டோபர் மாதம் 4ஆம் தேதி 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகப் பேசிய பேச்சு இன்று சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

மாநில அரசு சார்பில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியாம் இது.

இது தொடர்பான விடியோவில், திருமணமாகாத காவல்துறை டிஐஜி சோஹானே பேசுகையில், முழு நிலவு நாளான பௌர்ணமியில் கருத்தரிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

நான்காவது புதிய தலைமுறையை நீங்கள்தான் கொண்டுவரப்போகிறீர்கள். இதனை நீங்கள் எவ்வாறு திட்டமிட்டிருக்கிறீர்கள்? இதனைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். பௌர்ணமி நாளில் கருத்தரித்தல் கூடாது. அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து, நான்காவது புதிய தலைமுறையை உருவாக்க தண்ணீர் அருந்துங்கள் என்று கூறியிருக்கிறார்.

படிக்கும் பிள்ளைகளிடம் சென்று கருத்தரிக்கும் முறை குறித்து பேசியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் பிடிஐ நிறுவனத்துக்கு தனது கருத்தை விளக்கியிருக்கிறார். நமது வேதங்கள் மற்றும் ஆன்மிக தத்துவங்களின் மீதான ஈர்ப்பினால்தான் இவ்வாறு கூறுகிறேன். நானும் அபிமன்யு திட்டத்தின் கீழ்தான் நான் இவ்வாறு பேசியிருக்கிறேன், இது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் சுயமரியாதையை வளர்த்துக் கொள்ள உதவுகிறது என்கிறார்.

காவல்துறையில் சேருவதற்கு முன்பு, மன அமைதியைத் தேடுவதற்கான ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றியிருப்பதாகவும், பள்ளிகளில் உரையாற்றியிருப்பதாகவும் கூறியிருக்கும் அவர், இந்து மதத்தைப் பொருத்தவரை பௌர்ணமி நாள் என்பது மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.