மும்பை உயர் நீதிமன்றம் 
இந்தியா

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 18 ஆண்டுகள் சிறையில் இருந்த இருவர் நிரபராதிகள் என வாதம்!

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில், 18 ஆண்டுகள் சிறையில் இருந்த இருவர் நிரபராதிகள் என மூத்த வழக்குரைஞர் வாதம்

DIN

மும்பையில், கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளூர் பயணிகள் ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர் நிரபராதிகள், 18 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள் என உயர்நீதிமன்றமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி மும்பை புறநகர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்ற போதிலும் கடந்த 18 ஆண்டுகளாக சிறையில் வாடுவதாக மூத்த வழக்குரைஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அறிக்கையை தாக்கல் செய்த, மூத்த வழக்குரைஞர், இருவரையும் நிரபராதிகள் என்று அறிவித்து, அவர்களுக்கான தண்டனையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு மூத்த வழக்குரைஞர் தனது வாதத்தை முன் வைத்தார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரு குற்றவாளிகள் சார்பில் மூத்த வழக்குரைஞர் எஸ்.முரளிதர் வாதிடுகையில், பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போது, ​​புலனாய்வு அமைப்புகள் செய்யும் ஒரு சமுதாயத்தைச் சார்ந்த முறையை குறிப்பிட்டுப் பேசினார்.

குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை இந்த அமர்வானது கடந்த ஐந்து மாதங்களாக நாள்தோறும் விசாரணை நடத்தி வருகிறது.

மும்பை புறநகர் ரயில் சேவையில், கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி, மேற்கு வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. அதில் 180 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. அதில் 5 பேருக்கு மரண தண்டனையும் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.

இதைத்தொடர்ந்து மகாராஷ்டிர அரசு, மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளும் மேல்முறையீடு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில்தான், இரண்டு பேர் நிரபராதிகள் என்று கூறி மூத்த வழக்குரைஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அப்பாவிகள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்படுகிறார்கள் என்று தனது வாதத்தின்போது குறிப்பிட்டார். நாளையும் தொடர்ந்து இவர் தனது வாதத்தை முன்வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT