முகப்பு
இந்தியா

தில்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு!

தில்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 14 ஜனவரி 2025, 12:36 pm IST
தில்லி முதல்வர் அதிஷி - கோப்புப் படம்
பகிர்:

தில்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பொதுப்பணித் துறை அதிகாரி மீது தில்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜனவரி 7 ஆம் தேதி அரசு வாகனத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக முதல்வர் அதிஷிக்கு எதிராக தேர்தல் நடத்தும் அதிகாரி முதலில் புகார் அளித்தார்.

விசாரணையைத் தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்திற்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்தியதாக தில்லி முதல்வர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisement

இதுதொடர்பாக கோவிந்த் புரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல் உதவி ஆணையர் கல்காஜியிடம் புகார் கடிதம் அளிக்கப்பட்டது.

இதுபற்றி முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, “மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், அரசியல் நோக்கங்களுக்காக அரசு வாகனத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

தேர்தலின் போது பிரசாரம் தொடர்பான பயணங்களுக்கு அரசு வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.