ஜெய்ராம் ரமேஷ் கோப்புப் படம்
இந்தியா

உலகம் முழுக்கச் செல்லும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: ஜெய்ராம் ரமேஷ்

உலகம் முழுவதும் செல்ல நேரம் ஒதுக்கிய பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இன்னும் நேரம் ஒதுக்கவில்லை

DIN

உலகம் முழுவதும் பயணிக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இன்னும் நேரம் ஒதுக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, சமூக நீதி உள்ளிட்டவற்றை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் மணிப்பூரில் இருந்து ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

''சரியாக ஓராண்டுக்கு முன்பு இதே நாளில் மணிப்பூரில் இருந்து காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கியது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 15 மாநிலங்களைக் கடந்து 6600 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்த ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடர்ந்து, மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபெற்றது. மும்பையில் மார்ச் 16ஆம் தேதி நிறைவு பெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுவதற்காக மணிப்பூர் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது. உலகம் முழுக்க பயணிக்க நேரத்தையும் ஆற்றலையும் கொண்டுள்ள பிரதமர் மோடி, மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதை அவசியம் என்று கருதவில்லை.

தனது கட்சி முதல்வர், எம்.எல்.ஏ.க்கள் உள்பட மணிப்பூர் தலைவர்களை சந்திப்பதை அவர் தவிர்த்து வருகிறார்.

மணிப்பூரின் வேதனை மே 3, 2023 முதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மணிப்பூருக்கான உத்தேச ஆய்வுப் பயணத்தை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூரில் மே 2023 முதல் மைதேயி - கூகி இன மக்களிடையே நடைபெற்று வரும் மோதல் மற்றும் போராட்டங்களால் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | தில்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முக்கிய மசோதாக்களை கூட்டத்தொடரின் கடைசி நாள்களில் தாக்கல் செய்யலாமா? -கனிமொழி எம்.பி. கண்டனம்!

வெட்கச் சிரிப்பில்.... அனுமோள்!

அக்னி - 5 ஏவுகணைச் சோதனை வெற்றி!

வளர்ப்பு நாய்கள் வைத்திருப்போருக்கு... சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!

ஆந்திரம்: குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!

SCROLL FOR NEXT