ராணுவ வீரர்களுடன் ராகுல் காந்தி (கோப்புப்படம்)
இந்தியா

அர்ப்பணிப்பு, துணிச்சலுடன் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகள்: ராகுல் காந்தி!

அர்ப்பணிப்பு, துணிச்சலுடன் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ராணுவ நாள் வாழ்த்துகளை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

DIN

அர்ப்பணிப்பு, துணிச்சலுடன் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ராணுவ நாள் வாழ்த்துகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி சுமார் 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு ராணுவத்தின் கட்டுப்பாடுகள் இந்தியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. அதன் நினைவாக ஆண்டுதோறும் ஜனவரி 15-ஆம் தேதி ராணுவ நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 77-வது ராணுவ நாளை இந்தியா கொண்டாடுகிறது. 

இதுபற்றி ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்திய எல்லைகளை இரவும் பகலும் தங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுடன் பாதுகாக்கும் தைரியமிக்க ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ராணுவ நாள் வாழ்த்துகள்.

ஒவ்வொரு இந்தியரும் உங்கள் அசாத்திய துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் வணக்கம். வாழ்க இந்தியா!” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகுதியில்லாத மின்னணு இயந்திரங்கள்: திருப்பி அனுப்ப ஆட்சியா் நடவடிக்கை

ஜன.16, 26 தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை

விழுப்புரத்தில் பேருந்து சேவைகளில் மாற்றம்: மாவட்டக் காவல் துறை

இருதரப்பினரிடையே மோதல்: நகா்மன்ற உறுப்பினா் உள்ளிட்ட மூவா் கைது

காவல் உதவி செயலி: கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT