நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது!
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாந்த்ராவில் உள்ள நடிகர் சைஃப் அலி கானின் வீட்டில், மர்மநபர் ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். அதைத் தடுக்கவந்த சைஃப் அலிகானை அந்த மர்ம நபர் கத்தியால் தாக்கியதில், அவர் பலத்த காயம் அடைந்தார்.
சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரைக் கண்டுபிடிக்க மும்பை காவல்துறை 20 தனிப்படைகளை அமைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
சத்குரு ஷரணில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை முயற்சியின் போது நடந்த தாக்குதலுக்குப் பிறகு, தாக்குதல் நடத்திய நபரின் உருவம் பதிவான கண்காணிப்பு கேமராக் காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அதன்படி, நடிகர் சைஃப் அலிகான் தாக்கப்பட்டு 30 மணி நேரத்திற்கும் மேலான நிலையில், மும்பை காவல்துறையினர் சந்தேகப்படக்கூடிய ஒருவரை விசாரணைக்காக வெள்ளிக்கிழமை பாந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், அவரிடம் தாக்கப்பட்டதற்கான விவரம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.