சஞ்சய் ராய் கோப்புப் படம்
இந்தியா

பெண் மருத்துவர் கொலையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பு: சஞ்சய் ராய் கூச்சல்

பெண் மருத்துவர் கொலையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பிருப்பதாக சஞ்சய் ராய் கூச்சலிட்டார்.

DIN

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பை வாசித்தபோது, எப்போதும் போல அப்பாவியாக முகத்தை வைத்திருந்த சஞ்சய் ராய், நீதிமன்றத்துக்குள்ளேயே தான் ஒரு அப்பாவி என்றும், ஒரு ஐபிஎஸ் அதிகாரிகள்கு இந்த கொலையில் தொடர்பிருப்பதாகவும் கத்தியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி, ஆர்ஜிகர் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரங்களை திங்கள்கிழமை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, அதனைக் கேட்ட சஞ்சய் ராய், நான் தவறுதலாக வழக்கில் சிக்கவைக்கப்பட்டுவிட்டேன், இதனை நான் செய்யவில்லை. உண்மையில் இதனை செய்தவர்களை விட்டுவிட்டார்கள். இதில் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கும் தொடர்பிருக்கிறது என்று கூச்சலிட்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டிருக்கிறது.

நான் எப்போதும் என் கழுத்தில் ருத்திராட்சம் இணைக்கப்பட்ட சங்கிலியை அணிந்திருப்பேன். ஒருவேளை இந்தக் குற்றத்தை நான் செய்திருந்தால், அங்கேயே என் செயில் அறுந்து விழுந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. இந்தக் குற்றத்தை என்னால் செய்திருக்க முடியாது என்றும் அவர் கத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானதும், ஆர்ஜிகர் மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் ஏஎன்ஐ செய்தியாளர்களிடம் பேசுகையில், மருத்துவமனை நிர்வாகம் சம்பவம் நடந்ததும் ஆதாரங்களையும் சாட்சிகளையும் அழித்துள்ளது. இந்த சஞ்சய் ராயைக் காப்பாற்றவா இதனைச் செய்தது. இதில் வேறு சிலருக்கும் தொடர்பிருக்கிறது. அதனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT