அஜித் பவார் (கோப்புப்படம்) 
இந்தியா

டீ விற்றவர் கிளப்பிய புரளியே மகாராஷ்டிர ரயில் விபத்துக்குக் காரணம்: அஜித் பவார்

புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட விபத்து பற்றி..

DIN

மகாராஷ்டிரத்தின் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் டீ விற்றவர் கிளப்பிய புரளியின் விளைவுதான் ரயில் விபத்துக்கு காரணம் என அந்த மாநில துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார்.

லக்னெளவில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த புஷ்பக் விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகப் பரவிய வதந்தியால், பயணிகள் சிலர் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னா், பெட்டியிலிருந்து அவசரமாகக் கீழே இறங்கி, அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றிருந்தனர்.

அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த பெங்களூரு-தில்லி இடையிலான கர்நாடக விரைவு ரயில், பயணிகள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 13 போ் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே புணேவில் செய்தியாளர்களிடம் பேசிய பவார்,

ரயிலில் உள்ள கேட்டீனில் டீ விற்பனையாளர் ஒருவர் ரயிலின் ஒரு பெட்டியில் தீப்பற்றியதாகக் கூச்சலிட்டார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஷ்ரவஸ்தியைச் சேர்ந்த இரண்டு பயணிகள் அதைக் கேட்டு, ரயிலில் பொருத்தப்பட்டிருந்த அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பொதுப் பெட்டியிலிருந்த அனைவருக்கும் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

சக பயணிகளிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், ரயில் நின்றதும் சிலர் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இரண்டு பக்கங்களிலிருந்தும் ரயிலில் இருந்து குதித்தனர். அருகிலுள்ள தண்டவாளத்தில் வேகமாக வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது.

தீ விபத்து பற்றிய வதந்தியின் விளைவுதான் இந்த விபத்து என்று அவர் கூறினார். உயிரிழந்த 13 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்ட காவல்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்ட நிலையில், சிறிது நேரம் கழித்து இரு திசைகளிலும் ரயில்களின் இயக்கம் மீண்டும் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT