ஜியோ, ஏர்டெல் 
இந்தியா

வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்-க்கு மட்டும் புதிய திட்டங்களை அறிவித்த ஜியோ, ஏர்டெல்!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் டேட்டா இன்றி வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வசதிக்கான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.

DIN

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் டேட்டா இன்றி வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வசதிக்கான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களையே பயன்பாட்டில் வைத்திருந்தன. இதனால் ஆண்ட்ராய்டு இல்லாத சாதாரண மொபைல்போன் வைத்திருப்பவர்களும் வாய்ஸ் கால் மட்டும் தேவைப்படுவோரும் டேட்டாவுடன் ரீசார்ஜ் செய்வதால் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதையடுத்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களில் வாய்ஸ் கால்களுக்கு(போன் அழைப்பு) மட்டும் திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்த உத்தரவிட்டிருந்தது. டெலிகாம் நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்களையும் மேற்கொண்டது.

ஜியோ பிளான்கள்

அதன்படி, ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள், டேட்டா இல்லாமல் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வசதிக்கு மட்டுமான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.

இதன்படி, ஜியோவில் ரூ. 458 -க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ. 479-க்கு 84 நாள்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 6 ஜிபி டேட்டா மற்றும் 1,000 எஸ்எம்எஸ் அடங்கிய திட்டம் இருந்தது. தற்போது டேட்டா இல்லாமல் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் வசதி மட்டும் கொண்டுள்ள திட்டம் அறிமுகமாகியுள்ளது.

இதேபோல ஓராண்டுக்கு ரூ. 1,985 -க்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 3,600 எஸ்எம்எஸ் உள்ளடக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, 6ஜிபி டேட்டாவுடன் 336 நாள்களுக்கு ரூ. 1,899 -க்கு இந்த திட்டம் பயனில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் பிளான்கள்

ஏர்டெல் நிறுவனமும் 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ. 509 -க்கு 84 நாள்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 900 எஸ்எம்எஸ்-கள்.

ரூ. 1,999 -க்கு ஓராண்டுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ்-கள் இலவசம்.

போன் அழைப்புகளை மட்டுமே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் உதவும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்!

கண் ஜாடை... லட்சுமி பிரியா!

கண்கள் பேசும்... ஸ்ரவந்திகா!

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்... மோக்‌ஷா!

சீனாவின் மேலும் ஒரு பொறியியல் அதிசயம்: உலகின் உயரமான பாலம்..!

SCROLL FOR NEXT