திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அகிலேஷ் யாதவ் PTI
இந்தியா

மகா கும்பமேளாவில் புனித நீராடிய அகிலேஷ் யாதவ்!

இந்தியா கூட்டணிக் கட்சியில் இருந்து, தலைவர் ஒருவர் கும்பமேளாவில் பங்கேற்றுள்ளது இதுவே முதல்முறை.

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று (ஜன. 26) கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

இந்தியா கூட்டணிக் கட்சியில் இருந்து, தலைவர் ஒருவர் கும்பமேளாவில் பங்கேற்றுள்ளது இதுவே முதல்முறை.

பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தா்கள் தினமும் புனித நீராடி வருகின்றனா்.

அந்தவகையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அவருடன் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

இந்தியா கூட்டணியில் இருந்து மகா கும்பமேளாவில் பங்கேற்ற முதல் தலைவராக அகிலேஷ் யாதவ் மாறியுள்ளார். இவரைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்களும் மகா கும்பமேளாவில் பங்கேற்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்தில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பிரயாக்ராஜுக்கு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. அவர்கள், பிப்ரவரி முதல் வாரத்தில் மகா கும்பமேளாவுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை காங்கிரஸ் கட்சியிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

தற்போது இந்தியா கூட்டணியில் இருந்து அகிலேஷ் யாதவ் கும்பமேளாவில் பங்கேற்றுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அகிலேஷ் யாதவுக்கு் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசியக்காரி... சோனம் பஜ்வா!

பைக்கிலிருந்து தவறி விழுந்த நிலத்தரகா் உயரிழப்பு

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயிலில் செப். 7-இல் பாலாலயம்

பேருந்தில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 59 லட்சம், 4 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்

கொள்ளை நிலா... ஐஸ்வர்யா ராஜேஷ்

SCROLL FOR NEXT