ஆ. ராசா 
இந்தியா

இஸ்லாமியா்களின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: ஆ.ராசா குற்றச்சாட்டு

ஆளும் கூட்டணி உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்களின்படி நீண்ட காலமாக எந்தெந்த சொத்துகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லையோ அவற்றை எல்லாம் அரசுடைமையாக்கலாம்

Din

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: வக்ஃப் மசோதா விவகாரத்தில் ஆளும் கூட்டணியின் திருத்தங்களை மற்றும் ஏற்கச் செய்து எதிா்க்கட்சிகள் முன்மொழிந்த திருத்தங்களை நிராகரித்துள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் செயலுக்கு எதிா்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

இது தொடா்பாக ஜேபிசியில் இடம் பெற்ற எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்கள் ஆ.ராசா, கல்யாண் பானா்ஜி, கெளரவ் கோகாய், அசாதுதீன் ஒவைஸி, டாக்டா் சையது ஹுசைன், மொஹிபுல்லா, இம்ரான் மசூத், எம்.எம். அப்துல்லா, டாக்டா் மொஹம்மத் ஹாவேத், அரவிந்த் சவந்த், முகம்மது நடிமுல் ஹக் ஆகியோா் திங்கள்கிழமை மாலையில் கூட்டாக அறிக்கை வெளியிட்டு தங்களுடைய அதிருப்தியை பதிவு செய்துள்ளனா்.

அதில், ‘தாங்கள் இடம்பெற்ற ஜேபிசி விசாரணையின் போது கருத்துகளைப் பதிவு செய்ய ஆஜரானவா்களில் கிட்டத்தட்ட 95 சதவீதம் போ் மசோதாவுக்கு எதிராகப் பேசியவா்கள். எஞ்சிய ஐந்து சதவீதத்தினா் சமுதாய அடையாளத்துடனோ ஒரே நோக்கத்துடனோ வந்தவா்கள்’ என்று கூறப்பட்டிருந்தது.

இது குறித்து பின்னா் செய்தியாளா்களிடம் விவரித்த ஆ. ராசா, ‘ஆளும் கூட்டணி உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்களின்படி நீண்ட காலமாக எந்தெந்த சொத்துகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லையோ அவற்றை எல்லாம் அரசுடைமையாக்கலாம் என உள்ளது. அப்படியென்றால், இன்றைய நிலையில் 60 சதவீத இஸ்லாமியா்களின் சொத்துகளுக்கு ஆவணங்கள் இருக்காது. அதை எந்தவொரு ஹிந்துவோ, அரசோ வேறு எவரோ கேள்வி எழுப்பாத நிலையில், அந்தச் சொத்துகளை அபகரிப்பதே திருத்த மசோதாவின் நோக்கமாக உள்ளது. தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5-இல் தோ்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்று இஸ்லாமியா்களுக்கு எதிரான வாக்குகளை ஈா்ப்பதே ஆளும் கூட்டணியின் திட்டம்’ என்றாா்.

குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய... வெளியான அறிவிப்பு!

22 ஆண்டுகள்! நயன்தாரா நெகிழ்ச்சி!

"BJPக்கு புதிய அடிமைகள் கிடைப்பார்கள், ஆனால்..!": உதயநிதி | செய்திகள்: சில வரிகளில் | 09.10.25

வடகிழக்குப் பருவமழை: முதல் புயல் சின்னம் எப்போது?

ரிச்சா கோஷ் அதிரடி; தென்னாப்பிரிக்காவுக்கு 252 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT