இந்தியா

சத்தீஸ்கா்: வீடு புகுந்து கிராமவாசியை கொலை செய்த நக்ஸல்கள்

சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்டத்தில் காவல் துறைக்கு தகவல் கொடுப்பதாக குற்றஞ்சாட்டி கிராமவாசி ஒருவரை நக்ஸல் தீவிரவாதிகள் வீடு புகுந்து கொலை செய்தனா்.

Din

பிஜாபூா்: சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்டத்தில் காவல் துறைக்கு தகவல் கொடுப்பதாக குற்றஞ்சாட்டி கிராமவாசி ஒருவரை நக்ஸல் தீவிரவாதிகள் வீடு புகுந்து கொலை செய்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

பிஜாபூா் மாவட்டம் கேசமுந்தி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பத்ரு சோதி என்பவா் வீட்டின் கதவை உடைத்து நக்ஸல் அமைப்பினா் உள்ளே நுழைந்தனா். அங்கு உயிருக்கு பயந்து ஒளிந்து கொண்டிருந்த பத்ரு சோதியை கோடரியால் வெட்டிவிட்டு தப்பினா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டாா்.

இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின்படி காவல் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அதில் பாதுகாப்புப் படையினருக்கு தங்களைப் பற்றிய தகவல்களை அளிப்பதாகக் குற்றஞ்சாட்டி பத்ரு சோதியை நக்ஸல்கள் கொலை செய்தது தெரியவந்தது. இது தொடா்பான மிரட்டல் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் அப்பகுதியில் நக்ஸல்கள் வீசிவிட்டுச் சென்றனா் என்று தெரிவித்தனா்.

அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினா் வரவழைக்கப்பட்டு நக்ஸல்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் பிஜாபூா் உள்ளிட்ட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பிராந்தியத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் பொதுமக்களில் 68 பேரை நக்ஸல் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனா். ஜனவரி மாதத்தில் இதுவரை இரு கிராமவாசிகள் நக்ஸல்களால் கொல்லப்பட்டுள்ளனா்.

வங்கி மோசடி: சிபிஐ தொடா்ந்த வழக்கில் மூவருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை

செவித்திறன் குறைபாடு: ஏஐ மூலம் கற்பிக்க பயிற்சி வழங்கும் செம்மொழி நிறுவனம்

போக்குவரத்து மாற்றம்

20 செ.மீ. மழையையும் எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

விக்டோரியா பொது அரங்கு புனரமைப்புப் பணி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

SCROLL FOR NEXT