கங்கையில்.. PTI
இந்தியா

கங்கையில் குளித்தால் வறுமை ஒழியாது: அமித் ஷாவுக்கு கார்கே பதில்

கங்கையில் குளிப்பதால் வறுமை ஒழிந்துவிடாது என்று அமித் ஷா புனித நீராடியது குறித்து கார்கே கருத்து

DIN

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடிய நிலையில், கங்கையில் குளிப்பதால் வறுமையை ஒழித்துவிட முடியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிரான மிகப்பெரிய பிரசாரக் கூட்டத்தைத் தொடங்கியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, பாஜக தலைவர்கள் பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு கங்கையில் நீராடி, புகைப்படக் கருவிகளுக்கு வேலை கொடுத்து வருகிறார்கள்.

எவர் ஒருவருடைய நம்பிக்கையும் சிதைக்க நான் விரும்பவில்லை. பாஜக - ஆர்எஸ்எஸ் என்ற பெயரில் இயங்கும் துரோகிகள் மற்றும், மதம் என்ற பெயரில் மக்களைத் துண்டாடும் அவர்களது செயல்களை காங்கிரஸ் ஒரு போதும் சகித்துக்கொள்ளாது என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், பிரதமர் மோடியும் அமித் ஷாவும் எண்ணற்றப் பாவங்களை செய்துவிட்டார்கள், அவர்களால் சொர்கத்துக்குச் செல்லவே முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

இதற்கு, பாஜக புரி மக்களவைத் தொகுதி எம்.பி. சம்பித் பத்ரா பதிலளிக்கையில், கோடிக்கணக்கான இந்து மக்களின் நம்பிக்கைக்கு எதிராக கார்கே பேசியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT