இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 
இந்தியா

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஜெய்சங்கா் 3 நாள் பயணம்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை புறப்பட்டாா்.

Din

புது தில்லி: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை புறப்பட்டாா்.

இந்தியா-யுஇஏ இடையேயான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் அந்நாட்டின் முக்கியத் தலைவா்களுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

பயணத்தின் ஒரு பகுதியாக அபு தாபியில் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் ‘ரைசினா மத்திய கிழக்கு’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் உரையாற்றவுள்ளாா்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘3 நாள் அரசுமுறை பயணமாக யுஏஇ சென்றுள்ள வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் அந்நாட்டு தலைவா்களை சந்தித்து பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் அமலாகியுள்ளது. இந்நிலையில், காஸா சூழல் குறித்தும் யுஏஇ தலைவா்களுடன் அமைச்சா் ஜெய்சங்கா் விவாதிக்கவுள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டது.

கண்கள் நீயே... மாளவிகா மனோஜ்!

அந்தி மாலை நேரம்... ஷெரின்!

பேன்ட் பாக்கெட்டுகளில் போன்; மடியில் லேப்டாப் வைத்தால்..? - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

மும்பையில் கனமழை! தென்னக ரயில் சேவையில் மாற்றம்: 14 ரயில்கள் ரத்து!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT