newindianexpress.com
இந்தியா

தில்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் பிரசாரம்!

தில்லி தேர்தல்: ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் பிரசாரம்

DIN

புது தில்லி : தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் வரும் பிப்.5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், இத்தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 30-ஆம் தேதி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுடன் இணைந்து அகிலேஷ் யாதவ் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’இண்டியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜவாதி காங்கிரஸுடன் நெருக்கமான உறவை கடைப்பிடிக்கிறது. இந்த சூழலில், தில்லி தேர்தலில் காங்கிரஸுக்கு எதிர் துருவத்தில் களம் காணும் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்கவுள்ளது தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT