மனோஜ் திவாரி 
இந்தியா

எம்பி மனோஜ் திவாரி குரலில்.. தில்லி பிரசாரப் பாடலை வெளியிட்ட பாஜக!

தில்லி பிரசாரப் பாடலை வெளியிட்ட பாஜக..

DIN

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜகவின் பிரசாரப் பாடலை அக்கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

தில்லி பேரவைத் தேர்தலுக்கான பிரசார பாடலில் வேறு சில பாடல்களும் ரீமிக்ஸ் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக திவாரி கூறியது,

கடந்த 2017இல் வெளியிடப்பட்ட பிரசார பாடலை ரீமிக்ஸ் செய்யவேண்டும் எனக் குழு என்னிடம் கேட்டது. அந்தவகையில், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய ரீமிக்ஸ் பாடலை தயாரித்துள்ளோம் அதை இன்று வெளியிடுகிறோம் என்று அவர் கூறினார்.

முன்னதாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தனது பிரசாரப் பாடலை வெளியிடுள்ள நிலையில், தற்போது பாஜக அக்கட்சியின் எம்பியான மனோஜ் திவாரியின் குரலில் பிரசாரப் பாடலை வெளியிட்டுள்ளது.

தில்லி பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக நிகழ உள்ளது. பிப்.8-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தலைநகரை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

நான்கரை மணிநேரம், 100 காவலர்கள்... மாணவியைக் கண்டுபிடிக்காதது ஏன்? இபிஎஸ் கேள்வி

ஆளுங்கட்சி உறுப்பினரின் குடும்பத்தினர் மூவர் சடலமாக மீட்பு! போலீஸார் விசாரணை

SCROLL FOR NEXT