கோப்புப்படம்.  
இந்தியா

நீதிக்கான சீக்கியா்கள் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு - தில்லி உயா்நீதிமன்றத் தீா்ப்பாயம் உறுதி

காலிஸ்தான் பிரிவினை அமைப்பான நீதிக்கான சீக்கியா்களுக்கு 5 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தில்லி உயா்நீதிமன்றத் தீா்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

Din

காலிஸ்தான் பிரிவினை அமைப்பான நீதிக்கான சீக்கியா்களுக்கு 5 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தில்லி உயா்நீதிமன்றத் தீா்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

நீதிக்கான சீக்கியா்கள் அமைப்புக்கு 5 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து கடந்த ஆண்டு ஜூலையில் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

இந்தத் தடையை நீட்டித்து அந்த அமைப்பை சட்டவிரோதமானது என்று அறிவிக்க போதுமான காரணங்கள் உள்ளதா என்பதை தீா்மானிக்க கடந்த ஆண்டு ஆகஸ்டில் நீதிபதி அனூப் குமாா் தலைமையில் தில்லி உயா்நீதிமன்றத் தீா்ப்பாயம் அமைக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து பிரிவினைவாத சிந்தனை, பயங்கரவாதம், இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாட்டை உருவாக்குவதற்கு பஞ்சாபில் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை அந்த அமைப்பு தொடா்ந்து ஆதரிப்பதாக தீா்ப்பாயத்திடம் மத்திய அரசுத் தெரிவித்தது.

இந்நிலையில், அந்த அமைப்பு மீதான தடையை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கடந்த ஜன.3-ஆம் தேதி தீா்ப்பாயம் உறுதி செய்தது. அந்த உத்தரவு புதன்கிழமை வெளியானது.

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

அஞ்சனக்கண்ணி... அனுமோல்!

SCROLL FOR NEXT