கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் படம் | பிடிஐ
இந்தியா

கும்பமேளாவில் கூட்ட நெரிசல்: 15 பேர் பலி!

கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலியாகினர்.

DIN

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்.

செவ்வாய்க்கிழமையன்று (மாலை நிலவரப்படி) 4.64 கோடிக்கும் அதிகமானோா் கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனா். மௌனி அமாவாசையான இன்று(ஜன.29) ஒரே நாளில் 10 கோடி போ்வரை புனித நீராட வர வாய்ப்புள்ளதால் மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மௌனி அமாவாசை நீராடலை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலே பக்தா்களின் எண்ணிக்கை எதிா்பாா்த்ததைவிட அதிகரித்துகொண்டே இருந்தது.

இந்த நிலையில், மௌனி அமாவாசையை முன்னிட்டு இரண்டாவது அமிர்த ஸ்னானத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில், பெண்களும் குழந்தைகளும் உள்பட ஏராளமான பக்தர்கள் காயமடைந்த நிலையில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும், காயமடைந்தவர்களை மீட்க ஆம்புலன்ஸ்கள் விரைவாக அனுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூர் செல்கிறாரா பிரதமர் மோடி?

கொலைகள் ஒப்பீடு! தில்லியைவிட சிகாகோவில் 15 மடங்கு அதிகம்!

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்

சென்னை: நள்ளிரவு கனமழையால் விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT