அமெரிக்கா, சீனா ஏஐ தளங்களுக்கு போட்டியாக இந்தியா ஏஐ?
ரூ. 10,370 கோடி மதிப்பில் உள்நாட்டு சிறந்த ஏஐ மாதிரி உருவாக்கப்படவிருப்பதாக மத்திய அமைச்சர் தகவல்
வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்கு போட்டியாக இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்தார்.
சாம் ஆல்ட்மேன் என்ற அமெரிக்கரின் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தளத்தை கடந்த ஒருவார காலமாக பின்னுக்குத் தள்ளியது, சீன செயற்கை நுண்ணறிவு தளம் டீப்சீக். இந்த நிலையில், டீப்சீக்கைத் தொடர்ந்து சீனாவில் மற்றொரு செயற்கை நுண்ணறிவு தளமான அலிபாபா க்வென் 2.5 மேக்ஸும் பிரபலமாகி வருகிறது.
தற்போது, இணையப் பயனாளர்களில் முன்னணியில் உள்ள சாட் ஜிபிடி, டீப்சீக், அலிபாபா க்வென் 2.5 மேக்ஸ் ஆகிய மூன்று செயற்கை நுண்ணறிவு தளங்களுக்கு இணையாகவும், அதனைவிடவும் மேம்பட்டதாகவும் இந்தியாவில் அடுத்த 8 முதல் 10 மாதங்களுக்குள் இந்தியா ஏஐ திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தளம் உருவாக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறினார். ரூ. 10,370 கோடி மதிப்பில் உள்நாட்டு சிறந்த ஏஐ உருவாக்கப்படவிருப்பதாகவும் கூறினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.