பட்ஜெட் தொடர் தொடங்கியது  
இந்தியா

குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி...

DIN

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முர்மு உரையாற்றி வருகிறார். இதனைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இரு அவைகளிலும் தாக்கல் செய்யவுள்ளார்.

மத்திய பட்ஜெட்டை அமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்கிறாா். இது, அவா் தொடா்ந்து 8-ஆவது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும்.

அதன் பின்னா் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 13-ஆம் தேதி வரையில் நடைபெறும் முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, ரயில்வே சட்டத் திருத்த மசோதா, பேரிடா் மேலாண்மை சட்டத் திருத்த மசோதா, எண்ணெய் வயல் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத் திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் மசோதா உள்பட 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 போ் உயிரிழந்த சம்பவம், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா் சரிவு, தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு ஆகிய விவகாரங்களை இந்தக் கூட்டத் தொடரில் எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பட்ஜெட் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உண்மைகளை மறுக்கிறார் முதல்வர்

நவ.15-க்குள் சம்பா காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தல்

உச்சநீதிமன்ற கண்காணிப்புக் குழுவில் தமிழக அதிகாரிகள்: பேரவையில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்

விடுதி மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பப் பயிற்சி அளிக்க நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து

SCROLL FOR NEXT