ம.பியில் வழக்கத்தை விட அதிக மழை..! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
மத்தியப் பிரதேசத்தின் 10 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பருமழை தொடங்கியது முதல், 55 மாவட்டங்களுக்கும் கடந்த ஜூன் 30 ஆம் தேதி வரையில், வழக்கத்தை விட 37 சதவிகிதம் அதிகமான மழை பெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தொடர்ந்து கனமழை அதிகரிப்பதால், குவாலியர், பிந்து, மொரேனா, ஷியோபூர், தாஷா, உமாரியா, திண்டோரி, கட்னி, மாண்ட்லா மற்றும் பன்னா ஆகிய 10 மாவட்டங்களுக்கு, அடுத்த 24 மணிநேரத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisement
இதன்படி, குறிப்பிடப்பட்ட 10 மாவட்டங்களுக்கும் அடுத்த 24 மணி நேரத்தில் 63.5 மி.மீ. முதல் 203.2 மி.மீ. (2.5 இன்ச் முதல் 8 இன்ச்) அளவிலான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், நர்மதாபுரம், சிந்த்வாரா, பந்துரா, சியோனி மற்றும் பால்காட் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் வரும் நாள்களில் அதிகப்படியான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், வழிபாட்டுத் தலங்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் அதிகாரிகளுக்கு, மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.
SUMMARY
More rain than usual in MP. Orange alert for 10 districts!
இதையும் படிக்க: தெலங்கானா பாஜக தலைவராக ராம்சந்தர் ராவ் நியமனம்!