இளநிலை நீட் தேர்வு எழுதிய குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அந்த மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதனையடுத்து, நாடெங்கிலும் கடந்த மே 4-ஆம் தேதி நடத்தப்பட்ட இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு மத்திய பிரதேசத்திலுள்ள ஒரு சில மையங்களில் மீண்டும் மறு தேர்வாக நடத்தப்படவிருக்கிறது.
மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூர் மற்றும் உஜ்ஜைனியில் உள்ள குறிப்பிட்ட சில மையங்களில் தேர்வெழுதியவர்கள் அங்கு ஏற்பட்ட மின் தடையால் போதிய வெளிச்சமின்றி பாதிக்கப்பட்டதால், பிற மையங்களில் தேர்வெழுதிய சக மாணவர்களைப் போல முழு திறனுடன் எழுத முடியவில்லை என்று புகார் எழுந்தது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பிலிருந்து மறு தேர்வு நடத்த கோரி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற இந்தூர் கிளையில் நீதிபதி சுபோத் அப்யங்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையில் மாணவர்கள் தரப்பிலிருந்து கோரப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுகும் மறு தேர்வு நடத்த, சட்டப்பிரிவு 14-ஐ மேற்கோள் காட்டி உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் அந்த மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு நடத்தப்பட உள்ளது.
NEET-UG retest for candidates affected by power cuts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.