கோப்புப் படம் 
இந்தியா

பசுவதை: அசாமில் 2 நாள்களில் 192 பேர் கைது! 1.7 டன் இறைச்சி பறிமுதல்!

அசாமில் பசுவதை வழக்கில் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

வடகிழக்கு மாநிலமான அசாமில் கால்நடைப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, பசுவதை செய்ததாக சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கால்நடைகள் பலியிடப்படுவதாகவும், பல உணவகங்களில் உரிய அனுமதியின்றி மாட்டிறைச்சி விற்பனைச் செய்யப்படுவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அசாமின் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினர் நேற்று (ஜூலை 1) முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (ஜூலை 2) வரை இரண்டு நாள்களாக 178 உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் ஆகியவற்றில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தச் சோதனைகளில் சுமார் 192 பேர் கைது செய்யப்பட்டு, 1,732 கிலோ அளவிலான மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அசாமில் மாட்டிறைச்சி தடை செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், அசாமின் கால்நடைப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, கோயில்கள் அமைந்துள்ள இடங்களிலிருந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு கால்நடைகள் பலியிடவும், அதன் இறைச்சிகளை விற்பனைச் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT