வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவரது மகன் கே.டி. ராமராவ் தெரிவித்துள்ளார்.
உயர் இரத்த சர்க்கரை மற்றும் சோடியம் அளவு குறைவு காரணமாக தெலங்கானா முன்னாள் முதல்வரும் பி.ஆர்.எஸ் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் வியாழக்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே கே.சி.ஆரின் உடல்நலம் குறித்து வியாழக்கிழமை நலம் விசாரித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, விரைவில் அவர் குணமடைய வேண்டும் என வாழ்த்தினார். மேலும் மத்திய அமைச்சர்கள் ஜி. கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோரும் சந்திரசேகர் ராவ் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.
இந்த நிலையில் வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் மேலும் அவருக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை என்றும் அவரது மகனும் பி.ஆர்.எஸ் செயல் தலைவருமான கே.டி. ராமராவ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
Summary
BRS president K Chandrasekhar Rao was admitted to hospital for a routine health check-up and there are no serious health concerns, his son and BRS Working President K T Rama Rao said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.