கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்டு வரும் மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாகத் தற்போது சில பரிசோதனைகளை மேற்கொள்ள, இன்று (ஜூலை 4) இரவு அவர் அமெரிக்கா செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் பயணம் 10 நாள்கள் வரை நீடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதனால், அவரது தலைமையில் நடைபெறவுள்ள, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தை அவர் இணையதளம் வாயிலாகத் தலைமைத் தாங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, முதல்வர் பினராயி விஜயன் கடந்த 2022-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.
மேலும், கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் நேற்று (ஜூலை 4) கட்டடம் இடிந்து ஒருவர் பலியானார். இதனால், கேரள சுகாதாரத் துறை தொடர்ந்து விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், முதல்வரின் மருத்துவப் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.