ஆன்லைன் மோசடி நடவடிக்கை தொடர்பாக 48 சீனர்கள் உள்பட 71 வெளிநாட்டினரை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேசிய சைபர் குற்ற புலனாய்வு நிறுவனம் லாகூரில் இருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பைசலாபாத் நகரில் கால்சென்டரில் சோதனை செய்து 150 பேரை கைது செய்தது.
அவர்களில் சீனா, நைஜீரியா, பிலிப்பின்ஸ், இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே மற்றும் மியான்மரைச் சேர்ந்த சந்தேக நபர்கள் அடங்குவர் என்று அந்த அதிகாரி கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் சீனாவைச் சேர்ந்த 44 ஆண்கள், 4 பெண்கள், நைஜீரியாவைச் சேர்ந்த 3 ஆண்கள், 5 பெண்கள், 3 பிலிப்பின்ஸ், 2 இலங்கையைச் சேர்ந்தவர்கள், 6 பேர் வங்கதேசத்தினர், 1 ஜிம்பாப்வே மற்றும் மியான்மரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அடங்குவர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டினர் வங்கி அமைப்புகளை ஹேக் செய்வதிலும், பல்வேறு சைபர் குற்றங்களைச் செய்வதிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட கால்செண்டர் முன்னாள் மூத்த அரசு அதிகாரி ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படுகிறது. இந்த கால்செண்டரில் பலரிடமிருந்து மில்லியண் கணக்கான ரூபாய்களை மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
மேலும் கால்செண்டரில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான மடிக்கணினிகள், மின்னணு சாதனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 71 பேர் மீது மின்னணு குற்றத் தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.