அருணாசலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில், யானை தாக்கியதில் அம்மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலியாகியுள்ளார்.
திராம் மாவட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காப்சென் ராஜ்குமார் (வயது 65), இன்று (ஜூலை 9) அதிகாலை நாம்சங் கிராமத்தில் இருந்து தியோமாலி நகரத்துக்கு தனது வழக்கமான நடைப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
அப்போது, திடீரென அங்கு வந்த காட்டு யானை ஒன்று அவரைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், காப்சென் ராஜ்குமாரின் மரணத்துக்கு அருணாசலப் பிரதேசத்தின் முதல்வர் பேமா காந்து இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை அம்மாநில அரசு செய்யும் என அவர் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, காப்சென் ராஜ்குமார், கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 1990 வரை அம்மாநிலத்தின் வடக்கு கோன்சா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.