பாட்னாவில் உள்ள சச்சிவாலே ஹால்ட் ரயில் நிலையத்தில், சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் ரயில் தண்டவாளங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  படம் | பிடிஐ
இந்தியா

வாக்காளர் பட்டியல் திருத்தம்: பிகாரில் வலுக்கும் போராட்டம்!

வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரில் வலுக்கும் போராட்டத்தைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

பிகார் பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், இன்று (ஜூலை 9) நாடு முழுவதும் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு மத்தியில் பிகாரில் நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் மகாபந்தன் கூட்டணிக் கட்சிகள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சோன்பூர் மற்றும் ஹாஜிபூரில் முற்றுகைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் டயர்களை சாலையில் போட்டு எரித்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும் இணைந்து போராட்டத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக பாட்னாவில் காலை 10 மணிக்கு நடைபெறும் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவுள்ளார்.

கோலம்பரில் உள்ள வருமான வரி அலுவலகத்திலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பேரணியாக ராகுல் காந்தி செல்லவிருக்கிறார். அவருடன் தேஜஸ்வி யாதவும் பங்கேற்கிறார்.

ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விகாஷீல் இன்சான் கட்சி மற்றும் சுயேச்சைத் தலைவர் பப்பு யாதவ் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணியில் ஈடுபடவுள்ளனர்.

சோன்பூரில் ஆர்ஜேடி எம்எல்ஏ முகேஷ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முக்கிய போராட்ட இடங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஜெகனாபாத் ரயில் நிலையத்தில் ஆர்ஜேடி மாணவரணியினர் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Trains halted, roads blocked: INDIA bloc protests over Bihar voter roll revision

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT