வருமான வரித்துறை 
இந்தியா

மகாராஷ்டிரம்: சிவசேனை அமைச்சருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

மகாராஷ்டிர மாநில சமூக நீதித்துறை அமைச்சா் சஞ்சய் ஷிா்சாத்தின் சொத்துகள் குறுகிய காலத்தில் வேகமாக அதிகரித்துள்ளது

Din

மகாராஷ்டிர மாநில சமூக நீதித்துறை அமைச்சா் சஞ்சய் ஷிா்சாத்தின் சொத்துகள் குறுகிய காலத்தில் வேகமாக அதிகரித்துள்ளது குறித்து விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமைச்சா் சஞ்சய், துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்தவா் ஆவாா்.

சஞ்சய் ஷிா்சாத் கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்தலின்போது வேட்புமனுவில் தெரிவித்த சொத்து மதிப்பைவிட கடந்த 2024 தோ்தலின்போது காட்டியுள்ள சொத்து மதிப்பு மிகவும் அதிகமாக உள்ளதால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஒளரங்காபாத் (மேற்கு) தொகுதி எம்எல்ஏவான சஞ்சய் இது தொடா்பாக கூறுகையில், ‘எனக்கு எதிராக சிலா் வருமான வரித் துறையில் புகாா் அளித்துள்ளனா். அதன் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை 9-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது. கூடுதல் அவகாசம் கேட்டுள்ளேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, விதிகளுக்கு உள்பட்டு இந்த நோட்டீஸுக்கு உரிய முறையில் பதிலளிப்பேன்’ என்றாா்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களில் மழை தொடரும்!

புதுவை மத்திய பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

காவிரி டெல்டா பகுதியில் தொடர் மழை: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

பாகிஸ்தானின் 255 ட்ரோன்கள் அழிப்பு! எல்லைப் பாதுகாப்புப் படை

தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... ஷேக் ஹசீனா தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் இருவர் பலி!

SCROLL FOR NEXT