கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருவதால், அங்குள்ள விமான நிலையத்தைச் சுற்றிலும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவை பறக்க அடுத்த 3 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கண்ணூர் மாவட்டத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஜூலை 12) விமானம் மூலம் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, 3 நாள்களுக்கு கண்ணூர் விமான நிலையத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்கு ட்ரோன்கள், பாராகிளைடர்கள், ராட்சச பலூன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் கே. விஜயன் தடை விதித்துள்ளார்.
இதுகுறித்து, இன்று (ஜூலை 11) வெளியிடப்பட்ட அறிக்கையில், விமானம் பறப்பதற்கு அல்லது தரையிறங்குவதற்கு இடையூறாக அமையக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்துறை அமைச்சரின் வருகையைப் பற்றி வெளியான அறிக்கையில், தில்லி திரும்பும் முன்னர் கண்ணூரிலுள்ள பிரபல ராஜராஜேஸ்வரா கோயிலுக்கு அவர் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரூ.37.5 லட்சம் வெகுமதி! சத்தீஸ்கரில் 22 நக்சல்கள் சரண்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.